நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் பிப்., 4-ம் தேதி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் திருவிழா, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, என அதன் தலைவர் என். அகிலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
நாமக்கல்லில் பிப். 4-ம் தேதி நடைபெறும் வேளாண் திருவிழா மற்றும் கண்காட்சி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைத்துறை, பட்டு வளர்ச்சி, வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இதில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. விவசாயம் குறித்த பல்கலைக்கழக வல்லுநர்களின் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தின் மண் (100 கிராம்) நீர் மாதிரிகள் (250 மில்லி) கொண்டு வந்தால் மண்ணின் கார, அமிலத்தன்மை மற்றும் உப்பின் அளவும் தெரிந்துகொள்ளலாம். இதில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago