பராமரிப்புப் பணியை தனியாருக்கு விட எதிர்ப்பு சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கைவிட வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவைக் கலைக்க வேண்டும். பணி நீக்க காலம் மற்றும் பணியின் போது மறைந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்குவதைக் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலைப்பணியாளர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ், தர்மலிங்கம் (கோபி), பிரான்சிஸ் அமல்ராஜ் (திருப்பூர்), விஜயகுமார் (நீலகிரி), ஜெகநாதன் (கரூர்) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில், சங்க நிர்வாகிகள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்