புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினத்தில் இளைஞரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப் பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் இடையாங்குடியைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவர், குடும்பத்தின ருடன் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் சாமு வேல்(20).
சாமுவேலின் சகோதரியை கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த வி.வேலாயுதபெருமாள்(65) கடந்த 1990-ல் கேலி செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கத்தியால் குத்தியதில் சாமுவேல் இறந்துவிட்டார். இதையடுத்து, வேலாயுதபெருமாளை கோடைப் பட்டினம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த வேலாயுதபெருமாள், நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை. இதையடுத்து, வேலாயுதபெரு மாளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 1991-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வேலாயுதபெருமாள் கடந்த 2019-ல் கேரளாவில் பதுங்கி இருந்தபோது, போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வேலாயுதபெருமா ளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3,000 அபராதம் விதித்து நீதிபதி எஸ்.அப்துல்மாலிக் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago