குடியரசு தினத்துக்கு விடுமுறை விடாத 138 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்காத 138 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை சட்ட நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது: திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் எம்.பாலசுப்பிரமணியன், இணை ஆணையர் டி.தர்மசீலன் ஆகி யோரின் வழிகாட்டுதலின்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) வெ.தங்கராசு தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று (ஜன.26) திருச்சி மாவட்டத்தில் உள்ள 182 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடு முறை அளிக்காத 138 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இனி வரும் தேசிய விடு முறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காமல், தொழிலாளர்களை பணியாற்ற நிர்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்