தமிழகத்தில் உள்ள 20 மாவட் டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி, 20 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு திருச்சியில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடை பெறும் பயிற்சி முகாமை, ஆட்சியர் சு.சிவராசு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:
இந்தப் பயிற்சி முகாமில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக் குடி, கன்னியாகுமரி உட்பட 20 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 118 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் பிரத்யேக பயிற்சி பெற்ற தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் அனில் சல்கோத்ரா, சிவபிர சாந்த் சர்மா, எஸ்.கே.சித்தா, வி.ராகவேந்திரா, ஆர்.எம்.பாண்டி யா, ரோகிக்கான், மதுசுதன் சர்மா, தர் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
இந்த பயிற்சி முகாம் ஜன.30-ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளின்போது, மாநில தலைமை தேர்தல் அலுவலரால் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
தேர்தல் சட்டங்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள், அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைகள், வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இங்கு உள்ளவர்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago