திருச்சியில் முதன்முறையாக தென்னூர் காவேரி மருத்துவ மனையில் உலகத்தரத்திலான அதிநவீன 128 சிலைஸ் சிடி ஸ்கேன் இயந்திரம் நேற்று இயக்கி வைக்கப்பட்டது.
திருச்சி எச்ஏபிபி தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஷ் கரே, ஜி.இ.நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவரும், விப்ரோ ஜி.இ.ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குந ருமான ஷ்ரவன் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து இந்த இயந்திரத்தை இயக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எஸ்.மணிவண்ணன் முன்னிலை வகித்து பேசும்போது, ‘‘தொழில்நுட்பத்தின் முன்னேற் றங்கள் மருத்துவச்சேவையை சிறப்பாக வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தென்னூர் காவேரி மருத்துவமனையில் இந்த சிடி ஸ்கேன் நிறுவப் பட்டதன் மூலம் எங்களது நோயாளிகளுக்கு துல்லியமாகவும், பாதுகாப் பாகவும் சிகிச்சை வழங்க முடியும்’’ என்றார்.
இந்த ஸ்கேன் இயந்திரம், இருதயம் மற்றும் புற்றுநோய்க்கான ஒளிபடங்களை முப்பரிமாண மற்றும் நான்கு பரிமாணத்தில் காட்டும். குறைவான கதிர்வீச்சு தன்மை கொண்டது (80 சதவீதம் வரை). ஓரிரு நிமிடங்களில் ஸ்கேன் எடுக்கக்கூடிய அதிவேக திறன், கரோனரி ஆஞ்சியோகிராபி, புற ரத்தநாள ஆஞ்சியோகிராபி, மூளை ரத்த நாள ஆஞ்சியோ கிராபி, மூளையின் பகுப்பாய்வு ஸ்கேன் ஆகிய வசதிகளைக் கொண்டது. நிகழ்ச்சியில், பெசிலிட்டி இயக்குநர் அன்புச்செழியன், கதிரியக்கத் துறைத் தலைவர் வி.செந்தில்வேல் முருகன் ஆகி யோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago