நெல்லை கொக்கிரகுளத்தில் கட்டிடங்கள் அகற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை யொட்டி போக்குவரத்து க்கு இடையூறாக இருந்த கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள சுலோ ச்சனா முதலியார் பாலத்துக்கு அருகே புதிய பாலம் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலத்தின் தொடக்கப்பகுதியிலுள்ள இணைப்பு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம் தேவர் சிலை அருகே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி யிருக்கிறது. ஆனால் அப்பகுதியில் ஏராளமான கடைகளும், குடியிருப்புகளும், அரசு கட்டிடங்களும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 12-ம் தேதி நேரடியாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

பூட்டியிருந்த கடைகள் மற்றும் வீடுகள் முன் நோட்டீஸ் ஒட்டப் பட்டன. நோட்டீஸ் பெற்றவர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு இடங்களை காலி செய்துவந்தனர்.

இதையடுத்து பாளையங் கோட்டை வட்டாட்சியர் பகவதி பெருமாள், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை, மாநகராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். கடைகளை இடித்து அகற்றும் பணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனி டையே கடைகளை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்