திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 1,479 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று திறந்துவிடப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்குமுன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்த தொடர்மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகள் நிரம்பியதை அடுத்து, பெருமளவுக்கு உபரிநீர் திறக்கப் பட்டிருந்தது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
பின்னர் படிப்படியாக மழை குறைந்ததை அடுத்து, ஆற்றில் வெள்ளம் குறைந்தது. அதேநேரத்தில் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணையிலிருந்து 1,004 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 475 கனஅடி தண்ணீர் என, நேற்று மொத்தம் 1,479 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 742 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 256 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):
பாபநாசம்- 141.60 அடி (143 அடி), சேர்வலாறு- 148.98 (156), மணிமுத்தாறு- 117.30 (118), வடக்கு பச்சையாறு- 49 (49), நம்பியாறு- 22.96 (22.96), கொடுமுடியாறு- 34 (52.50).
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago