தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் தனிக்கொடி மகன் தயாளன் (36).இவரிடம் கடந்த 2019-ல் தேனியில் வணிக வரித்துறை உதவி அலுவலராக பணிபுரிந்த லதா என்பவர் ரூ 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார் .
பணத்தை இரண்டு மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி முன் தேதியிட்ட காசோலை வழங்கி உள்ளார். தயாளன் இதை வங்கியில் செலுத்தியபோது சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் லதா மாறுதலாகி திண்டுக்கல் மாவட்டத்துக்குச் சென்று விட் டார். இதையடுத்து தயாளன் இது தொடர்பாக தேனி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நேற்று முடிந்த நிலையில் 10 மாதம் சிறை தண்டனை விதித்தும், ரூ.5 லட்சத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும் என நீதிபதி ரூபனா தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago