முட்டை விலையில் மீண்டும் சரிவு 25 காசுகள் குறைத்து 380 காசாக நிர்ணயம்

By செய்திப்பிரிவு

வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை நுகர்வு சரியத் தொடங்கியது. முட்டை விலையும் சரியத் தொடங்கியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முட்டை விலை 510 காசுகளாக இருந்தது. பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக இதன் விலை படிப்படியாக இறங்கத் தொடங்கியது. இதன்படி கடந்த 23-ம் தேதி முட்டை விலை 405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முட்டைக் கொள்முதல் விலை 25 காசுகள் வீதம் குறைத்து 380 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவு கோழிப்பண்ணையாளர்களை கவலையடைச் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்