தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை மாதந்தோறும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த ரயில்களின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் (எண் 06352) நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் 28.03.2021 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் (எண் 06351) மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரயில் 29.03.2021வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் (எண் 06070) திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில்28.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்துபுறப்படும் (எண் 06069) பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 30.03.2021 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் (எண் 06072) திருநெல்வேலி - மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் 31.03.2021 வரையும், வியாழக்கிழமை மும்பை தாதரில் இருந்து புறப்படும் (எண் 06071) தாதர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 1.4.2021 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். முன்பதிவு தற்போது நடை பெற்று வருகிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago