உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வக்பு வாரிய இடத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம், இஸ்லாமியர்கள் நேற்று மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். இதில், நிலப்பட்டா, சிட்டா அடங்கல், மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, காவல் துறை பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு பொது நல மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் சிவன் அருள் பெற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமி யர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘‘ கந்திலி பேருந்து நிறுத்தம் அருகே வக்பு வாரியத்துக்கு சொந்தமான 1.8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் தர்கா, மயானம், மக்கான் ஆகியவற்றை தமிழ்நாடு வக்பு வாரிய கண்காணிப்பில் கந்திலி ‘அஹ்லே சுன்னத் ஜமாத் கமிட்டியினர்’ பராமரித்து வந்தனர்.
இஸ்லாமிய சமுதாயத்தினர் உயிரிழந்தால் இங்குள்ள மயானப்பகுதியில் அடக்கம் செய்து வந்தோம். அதேபோல, மக்கான் பகுதியில் மொகரம் பண்டிகையும், தர்காவில் உருஸ் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளை நடத்தி வந்தோம். கந்திலி மட்டுமின்றி, தோக்கியம், கெஜல் நாயக்கன்பட்டி, நார்சாம் பட்டி, அண்ணா நகர், கும்டிக்கான்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் இந்த மயானப்பகுதியை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், வக்பு வாரி யத்துக்கு சொந்தமான இடத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து, சுமார் 60 சென்ட் நிலத்தை கையகப்படுத்தி கடைகளும், வீடுகளும் கட்டி பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக, கடந்த 2009-ம் ஆண்டு திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். அதன்படி, விசாரணை நடத்திய சார் ஆட்சியர் கடந்த 30-1-2019-ல் அனைத்து பட்டாக்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆக்கிரமிப் பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கதல் செய் தனர். அதன் மீது நடந்து வந்த விசாரணையில், உயர் நீதிமன்றம் வக்பு வாரியத்துக்கு ஆதரவாக கடந்த 5-6-2019-ல் தீர்ப்பளித்தது.
எனவே, ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்து 1.8 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’என தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago