தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிராமப்புறத்தில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தகுதி பெறும், மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்- 2 முடிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு, ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் உள்ள 13 மையங்களில் நடந்தது. இதில், 1,338 மாணவ, மாணவியர் தேர்வினை எழுதினர்.
கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்வுகள் தொடங்கியது. முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்களுக்கு, கிருமிநாசினி கொடுத்து சுத்தப் படுத்தப்பட்டது. அவர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. தேர்வு எழுதுவோருக்கு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஒரு மையத்தில் 130 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு தேர்வறையில் 10-க்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 124 மாணவர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரி வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago