கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று ஈரோடு ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
கலை நிகழ்ச்சிகள் ரத்து
இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், குடியரசு தின விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை (26-ம் தேதி) நடக்கவுள்ள குடியரசு தினவிழாவில் ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தியாகிகள் கவுரவிப்பு
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவிக்க வுள்ளார். முகக்கவசம் அணிந்த குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப் படவுள்ளனர்.அதேநேரத்தில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களை ஆட்சியர் விழாவில் கவுரவிக்கவுள்ளார்.
இந்நிலையில், குடியரசு விழாவுக்காக வ.உ.சி. மைதானத்தை தயார்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுநல அமைப்பினரும் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து குடியரசு தின விழா கொண்டாட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை (26-ம் தேதி) 72- வது குடியரசு தின விழா நடக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலம் மகாத்மா காந்தி விளை யாட்டு மைதானத்தில் நாளை காலை 8.05 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. விழாவில், ஆட்சியர் ராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் காவல் துறை யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் ஆட்சியர் அரசுப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார்.
அனுமதி
யில்லை
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழாவில் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. குடியரசு தின விழா நிகழ்ச்சியை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளில் இல்லங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago