பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ஒற்றையானை நடமாட்டம் வாகனஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ஒற்றையானையின் நடமாட்டம் தொடர்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. இந்த வனப்பகுதியில் உள்ள யானைகள், திம்பம் சாலையைக் கடப்பது வழக்கம். யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளில், வனத்துறையினர் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். சில நேரங்களில் பண்ணாரி சோதனைச்சாவடிப் பகுதிக்கும் யானைகள் வந்துள்ளன.

இந்நிலையில், பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கடந்த சில தினங்களாக பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சுற்றித் திரிகிறது. சத்தியமங்கலம் - திம்பம் சாலையில் சோதனைச்சாவடியில் இருந்து மலைப்பகுதி தொடங்குவதற்கு முன்பு உள்ள வனப்பகுதியில், சாலையோரத்தில் ஒற்றையானை சுற்றி வருகிறது. நேற்று முன் தினம் அதிகாலை, பண்ணாரியில் உள்ள போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை நடமாடியதால் சாலையை கடக்க முடியாமல் அச்சத்துடன் வாகனஓட்டிகள் காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றபின்பே, வாகனப் போக்குவரத்து சீரானது.

ஒற்றையானை நடமாட்டத்தால், சோதனைச்சாவடி பணியில் உள்ள போலீஸார் மற்றும் வனத்துறையினர் அச்ச மடைந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் யானையை விரட்ட, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்ணாரி வனப்பகுதி சாலையில், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, தமிழகத்தில் இருந்து கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் வருகின்றன. பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் சில கரும்புக் கட்டுக்களை லாரி ஓட்டுநர்கள் விட்டுச் சென்று விடுகின்றனர். இதனை சாப்பிடுவதற்காக தொடக்கத்தில் யானைகள் வந்தன. யானைகளுக்கு கரும்புக் கட்டு போடுவதை தடை செய்யாததால், இப்பகுதிக்கு வந்தால் கரும்பு கிடைக்கும் என சோதனைச்சாவடிப் பகுதியில் யானைகள் சுற்றித் திரிகின்றன, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்