கடையநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவல கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், “கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலக கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது.
இருப்பினும் அலுவலகத்தை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து வரும் 28-ம் தேதி மாலை 4.30 மணியளவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் இக்பால், நகரத் தலைவர் செய்யது மசூது, திமுக நிர்வாகிகள் முகமது அலி, வஹாப், காங்கிரஸ் நிர்வாகிகள் சமுத்திரம், அப்துல்லா யூசுப், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ராஜசேகரன், தமுமுக நிர்வாகிகள் பாதுஷா, அப்துல் ரஹீம், எஸ்டிபிஐ நிர்வாகி யாசர்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago