நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் ஓ.சௌதாபுரம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் வ.முகிலரசி தலைமை வகித்துப் பேசியதாவது:
மனச்சோர்வு என்பது ஒரு நோய். இது பரம்பரையாக வருவதாக இருக்கலாம் அல்லது மன அழுத்தத்தினாலும், மன இறுக்கத்தினாலும் வரலாம். இது தொடர்ந்து ஒரு மாதம் இருந்தால் நிச்சயமாக மனோதத்துவ டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பேய், பில்லி, சூனியம், செய்வினை, ஏவல், கெட்ட நட்சத்திரம் போன்றவற்றால் மன நோய் வருகிறது என்பது மூடநம்பிக்கை.
இதுபோல் குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் மனநோயே. மது தவிர கஞ்சா போன்றவையும் எளிதில் எல்லோரையும் அடிமைப்படுத்த கூடிய போதைப் பொருட்கள். மதுவிற்கு அடிமையான சிலரை மீட்பது சாத்தியம். பிறவகை போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பது மிகவும் கடினம். இப்பழக்கத்திற்கு அறிமுகம் ஆகாமலேயே இருத்தல் நல்லது,என்றார்.
தொடர்ந்து மன அழுத்தத்தை குறைக்க டிரஸ் பால் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மனநல ஆலோசகர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago