வீடு கட்டித்தருவதாகக் கூறி மோசடி வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

வீடு கட்டித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் நிறுவன ஊழியரின் மனைவி மற்றும் ஊழியர்களை கைது செய்ய ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சண்முகம் (32). மானிய திட்டத்தில் வீடு கட்டித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சண்முகத்தை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு சரக்கு ஆட்டோ, 2 இரு சக்கர வாகனம், 2 செல்போன் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மோசடி வழக்கில் தொடர்புடைய சண்முகம் மனைவி மோகனப்பிரியா, நிறுவன மேலாளர் சுரேஷ், கட்டிட மேஸ்திரிகள் உதயக்குமார், குணசேகரன், நவீன் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்