இறுதிப் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர்களை நீக்க முயற்சி செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்ட பிறகும் வாக்காளர் களை நீக்க முயற்சி நடைபெற்று வருவதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந் திரன் தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இதில், மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் மணி, மாநில சட்டத்துறை இணை செயலாளர் என்.மணிராஜ், குளித்தலை எம்எல்ஏ ராமர் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

கூட்டத்துக்குப் பின் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் பிறகு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மட்டுமே வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள முடியும். ஆனால், வாக்குச்சாவடி அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி, ஆளும்கட்சி அறிவுறுத்தல்படி குறிப்பிட்ட வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக் காத நிலையில், மண்டல அலுவ லர்கள் மூலம் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதொடர்ந்தால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்