ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 1210 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி அரசு மருத்துவமனைகள், சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் என 5 மையங்களில், முன்களப் பணியாளர்களுக்கு, கடந்த 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா தடுப்பூசி போட மருந்துகள் வந்துள்ளன.
தடுப்பூசி போடும்பணி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தொடக்க நாட்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டது.
அதன் பின்னர் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இன்று (22-ம் தேதி) வரை 1210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட அனைவரும் நலமாக உள்ளனர்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago