திருச்சி சஞ்சீவி நகர்- ஓயாமரி சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்களின் போக்குவரத்தை தடுக்க விரிவாக்கப் பணிகளை ஒருவாரத்துக்குள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை ஒப்புக்கொண்டுள்ளன.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் ஓயாமரி சாலையில் வாகனங்கள் எதிரெதிரே வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்தநிலையில், மாநகர காவல்துறை போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேஸ்வரன், சாலை பாதுகாப்புக் குழு உறுப் பினர் எம்.சேகரன், மாநில நெடுஞ் சாலைத்துறை, தேசிய நெடுஞ் சாலை ஆணைய அலுவலர்கள் நேற்று இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஓயாமரி சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் இணை யும் இடத்தில் இரு வழித்தடங் களுக்கும் நடுவே உள்ள பகுதியை (Island), ஓயாமரி பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் 4 மீட்டர் அளவுக்கு வழியை ஏற்படுத்துவது, சஞ்சீவி நகர் சர்வீஸ் சாலையை அகலப்படுத்துவது, ஓயாமரி சாலையில் உள்ள ஆர்டிஓ (கிழக்கு) அலுவலகம் அருகிலுள்ள சாலையின் மையத்தில் உள்ள திறப்பை மூடுவது, சஞ்சீவி நகர் சாலை சந்திப்பில் கூடுதல் மின் விளக்குகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த பணிகளை ஒருவாரத்துக் குள் முடிப்பதாக தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உறுதியளித்துள்ளனர் என எம்.சேகரன் ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago