திருச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற் றும் ஊழியர்கள் 1,127 பேர் உட்பட 1,492 பேருக்கு நேற்று வரை கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட 8 சுகாதார மாவட்டங்களுக்கான கரோனா தடுப்பூசிகள், திருச்சியில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு ஜன.13-ம் தேதி வரப்பெற்று, உடனடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணி யில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பதிவு செய்த முன்களப் பணியாளர் களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 160 மையங்களில் ஜன.16-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மருத்துவர்கள், செவிலியர்கள் என 1,158 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, லால்குடி, ரங்கம், துவாக்குடி, துறையூர் அரசு மருத்துவ மனைகள், புத்தாநத்தம், இனாம்குளத்தூர், சிறுகனூர் ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 334 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப் பட்டன. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,492 ஆகி யுள்ளது.
கரோனா தடுப்பூசி இட்டுக் கொண்ட 1,492 பேரில் 365 பேர் அரசின் மருத்துவத் துறைகளிலும், 1,127 பேர் தனியார் மருத்துவமனை களிலும் பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற் றும் ஊழியர்கள் ஆர்வம் காட்டு வது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago