ஜன.25-ல் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.25) நடைபெற உள்ளது

கும்பாபிஷேகத்தையொட்டி மகா சுதர்சன, பஞ்ச, சூக்த ஹோமங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. சூக்த மஹாலட்சுமி ஹோமம், 11 பசு மாடுகளுக்கு பூஜை, தீபாராதனை, முளைப்பாரி இடுதல், வாஸ்து ஹோமம் நேற்று நடைபெற்றன.

தொடர்ந்து, இன்று (ஜன.23) காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கங்கணம் கட்டுதல், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறும். நாளை (ஜன.24) அக்னி ஆராதனம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பிரதான ஹோமம், மூர்த்தி ஹோமங்கள், 2-ம் கால யாகசாலை பூஜை, கோபுர அச்சிமோனம் (கண்திறப்பு), 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளன.

நாளை மறுநாள் (ஜன.25) 4-ம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாட்டுக்கு பின்னர், காலை 10 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், ரங்கநாயகி சமேத அபயபிரதான ரங்கநாத சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம், நூதன பல்லக்கில் தேவி, பூமிதேவியுடன் ரங்கநாதர் திருவீதி உலா நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE