திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில், 32-வது சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு பெண்கள் மட்டும் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி, திருப்பத்தூர் - தருமபுரி கூட்டுச்சாலை வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில், பணிபுரியும் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், காவல் துறையினர், கல்லூரி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, "பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். முன்புபோல் இல்லாமல் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பணிபுரியும் பெண் கள் இரு சக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலைகளில் பெண்கள் வாகனங்களை இயக்கும்போது, போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் விழிப்புடன் வாகனங்களை இயக்கி விபத்தில்லா மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை மாற்ற வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago