மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மத்திய தொல்லியல் துறையின் அனுமதியில்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா கட்டுமானப் பணி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிக் கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக தொல்லியல் துறையின் 16 நினைவு சின்னங்கள் உள்ளன. இதில் திருமலை நாயக்கர் மகால் முக்கியமானது. இந்த மகால் வளாகத்தில் சமீபத்தில் மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.3.25 கோடியில் பூங்கா உள்ளிட்டவை அமைக் கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி இப்பணிகளுக்கு மத்திய தொல்லி யல்துறையிடம் அனுமதி பெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை எம்பி.சு.வெங்கடேசன், கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு கூறியுள் ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசு தொல்லியல் துறைகளால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளக்கூடாது. அப்படியே பராமரிப்பு செய்தா லும் அதன் தொன்மையும், பாரம் பரியமும் மாறாமல் பராமரிக்க வேண்டும். எந்த ஒரு புதிய கட்டிடமும் கட்டக்கூடாது என்ற தொல்லியல்துறை விதிமுறைகள் உள்ளன. மகால் அருகே உள்ள குடியிருப்புகளில் கூட கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கு மாநில தொல்லியல் துறையின் தடை யில்லா சான்று பெற வேண்டும். ஆனால், தொல்லியல்துறையின் அனுமதியே பெறாமல் மகா லில் சுற்றுலாத்துறை புதிய கட்டிடங்களும், பூங்காவும் அமைத் துள்ளது. இதை தொல்லியல்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர்’’ என்றார்.
இதுகுறித்து மகால் தொல்லியல் துறை துணை இயக்குநரிடம் கருத்து கேட்க பல முறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்ட போது, ‘‘மகாலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி நான் வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்த ஆணையாளர் அனுமதி பெற்றாரா? என்பது தெரியவில்லை’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago