பழநியில் தைப்பூசத் திருவிழா வுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இரவில் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கைகளில் கைப்பட்டையைக் கட்டிச் சென்றால் பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் நடந்து செல்பவர் கையில் உள்ள பட்டை ஒளிரும். அதன் மூலம் விபத்து தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் புறவழிச்சாலையில் நடைபெற்றது. திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கினார். பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பாக போலீஸாரின் ரோந்து வாகனங்கள் திண்டுக்கல்-பழநி சாலையில் இயக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி., மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ் பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago