திருச்சியில் எம்ஜிஆர் சிலையிடம் நேற்று மனு அளித்ததுடன், சாலை மறியலிலும் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்ட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர் மழையால் பாதிக் கப்பட்ட பயிர்களுக்கு ஏக்க ருக்கு நெல்லுக்கு ரூ.30,000, வெங்காயத்துக்கு ரூ.40,000, பிற பயிர்களுக்கு ரூ.20,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் சமூகத்தில் உள்ள 68 சாதிப் பிரிவினருக்கும் டிஎன்டி என்று சான்றிதழ் வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எம்ஜிஆர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைப் பகுதியில் விவசாயிகள் உள்ளிட்டோர் நேற்று திரண்டனர். ஆனால், போலீஸார் அவர்களை எம்ஜிஆர் சிலை அருகே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, விவசாயிகளும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் கே.பி.எம்.ராஜா ஆகிய இருவர் மட்டும் எம்ஜிஆர் சிலையிடம் மனு அளித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது, சாலையோரம் காத்திருந்த விவசாயிகள் உள்ளிட் டோர் சாலைக்கு வந்து தரையில் படுத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago