திருச்சி மாநகரில் 18 இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

32-வது சாலைப் போக்குவரத்து மாதத்தையொட்டி, சாலைப் பாது காப்பை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தலைக் கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் போலீஸார் உட்பட ஏராளமான மகளிர் கலந்துகொண்டனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலை யம் செல்லும் புதிய சாலையில் ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோக நாதன் ஆகியோர் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம்- போக்குவரத்து) ஆர்.வேதரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை, கன்டோன்மென்ட் வழியாக எம்ஜிஆர் சிலை அருகே பேரணி நிறைவடைந்தது.

முன்னதாக, ஆட்சியர் சு.சிவராசு கூறியது:

சாலை விதிகளைக் கடை பிடிப்பதால் தமிழ்நாட்டில் பெரும ளவில் விபத்துகள் குறைந்துள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து இல்லாத நிலை யில், கடந்த 6 மாதங்களில் தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் விபத் துகளின் எண்ணிக்கை குறைவு. விபத்துகள் குறைவான மாநிலமாக தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது என்றார்.

ஆட்சியரைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறியது:

திருச்சி மாநகரில் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டில் 17 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. உயிரிழப்பு அல்லாத பொதுவான வாகன விபத்து 25 சதவீதம் குறைந்துள்ளது. விபத்து உயிரி ழப்புகளைத் தவிர்க்க வேண்டு மெனில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும்.

திருச்சி மாநகரில் கடந்தாண்டு ஆண்டு அதிக விபத்துகள் நேரிட்ட 18 இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் விபத்துகள் நேரிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரில் உள்ள 1,031 சிசிடிவி கேமராக்களும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. மேலும், மாநகரில் அனைத்து காவல் துறை சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஆட்சியர் நிதி ஒதுக்கி யுள்ளார். இதுமட்டுமின்றி வாகனப் பதிவெண்ணை பதிவு செய்யும் தானியங்கி கேமராவை பொருத் தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் குற்ற நடவடிக்கை களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டறியவும், விரைவாக பிடிக் கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

கரூரில்...

32-வது சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி கரூர் மாவட்ட போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விதிகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் சு.மலர்விழி, காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேரணியில், மாநில போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா ஆகியோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.

பேரணி, காளியப்பனூர், தாந்தோணிமலை, சுங்கவாயில் வழியாக சென்று கரூர் திருவள்ளு வர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, தமிழ்நாடு அரசு கரூர் மண்டல போக்குவரத்து மேலாளர் குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

பெரம்பலூரில்...

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, தலைக் கவசம் மற்றும் சீட்பெல்ட் அணி வதன் அவசியம் குறித்த விழிப்பு ணர்வு பிரச்சார பேரணியை பெரம் பலூரில் ஆட்சியர் ப.வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், நான்கு சாலை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.

காவல் துணை கண்காணிப் பாளர் சரவணன், வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் செல்வக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூரில்...

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, அரியலூரில் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மகளிர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று தொடங்கியது. பேரணியை ஆட்சியர் த.ரத்னா தொடங்கிவைத்தார். இப்பேரணி ஜெயங்கொண்டம் சாலை, பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் எஸ்.வெங்க டேசன், துணை காவல் கண்கா ணிப்பாளர் மதன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராசு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் காவல் துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்..

காரைக்காலில்...

சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, காரைக்காலில் நேற்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹரிகா பட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள், மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்