திருநெல்வேலி மாவட்டத்தில் 9 அம்மா மினி கிளினிக்குகளை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதியில் கோடாரங்குளம், பொட்டல், நாங்குநேரி தொகுதியில் இடையன்குளம், பருத்திப்பாடு, கொங்கந்தான்பாறை, திருநெல்வேலி தொகுதியில் பாரதியார் நகர், வெள்ளாளன்குளம், பாளையங்கோட்டை தொகுதியில் திம்மராஜபுரம்,செல்வி நகர் பகுதிகளில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் கூறும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் 48 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக 13 இடங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், மாவட்ட ஆவின் தலைவர் சுதாபரமசிவம், அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago