தேசிய வாக்காளர் தினத்தில் விழிப் புணர்வு பேரணி நடத்த வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “அனைத்து வட்டங்கள், நகராட்சி கள் மற்றும் வாக்குச்சாவடி மையங் களில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி எடுத்தல், முதல் வாக்காளர்களை கவுரவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சுவர் விளம்பரங்கள் செய்ய வேண்டும். துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் மற்றும் குறும்படங்களை திரையிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்த வேண்டும். தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago