சிறு, குறு விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டப் பயனாளிகளுக்கு வருவாய் ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவுக்கு இரண்டு புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், தண்ணீர் மற்றும் மண் பரிசோதனை ஆய்வறிக்கை, சிறு மற்றும் குறு விவசாயி சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான வருவாய்த் துறை ஆவணங்கள் வழங்கும் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் பிர்கா வாரியாக வருவாய் ஆய்வாளர் அலுவல கங்களில் நாளை (23-ம் தேதி) நடை பெறவுள்ளது. இதில், விவசாயிகள் விண்ணப்பித்து வருவாய்த் துறை தொடர்பான சான்றுகளை பெற்றுக் கொள்ள லாம். மேலும், நுண்ணீர் பாசன திட்டம் அமைப்பதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்