கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்பட்டியலில் 21,41,935 வாக்காளர் கள் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளி யிட்டார். இதுகுறித்து ஆட்சியர் கூறியது: 1.1.2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ( படிவம் 6) 69,418 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 67,660 மனுக்கள் ஏற்கப்பட்டன. 1,758 மனுக்கள் நீக்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்தொகுதிஆண் பெண் இதரர்மொத்தம்திட்டக்குடி (தனி)1,07,3031,11,65992,18,971விருத்தாசலம்1,25,2771,26,399272,51,703நெய்வேலி1,08,9361,08,935172,17,888பண்ருட்டி1,19,1501,25,533282,44,711கடலூர்1,14,6161,23,701472,38,364குறிஞ்சிப்பாடி1,19,7071,22,855232,42,585புவனகிரி1,23,3001,24,938192,48,257சிதம்பரம்1,22,8001,27,913222.50,735கா.ம.கோவில்(தனி)1,14,2021,14,503162,28,721மொத்தம்10,55,29110,86,43620821,41,935 பெயர் நீக்கம் செய்ய (படிவம் - 7) 8,869 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 8,645 மனுக்கள் ஏற்கப்பட்டன. 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 21,41,935 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 10,55,291,பெண் வாக்காளர்கள் 10,86,436, இதரர் 208 உள்ளனர் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago