வடலூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

வடலூர் ரயில்வே கேட் பண்ருட்டி - வடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலாஜி நகரில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திடீரென்று திறந்து மது விற்பனை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை முடிவிட்டு சென்றனர். தொடர்ந்து கடை முன்பு பெண்கள் அமர்ந்து கொண்டு கடையை நிரந்தமாக மூடக்கோரி முழக்கங்கள் எழுப் பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன்,ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் போலீஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்