மருத்துவக் கல்வி முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.வனிதா பேசியது: தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தவர்கள் உட்பட இங்கு சேர்ந்துள்ள அனை வரும் நன்கு படிக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி படித்து, மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ஹர்சியா பேகம், அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் எட்வினா, அறு வைச் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஏகநாதன் மற்றும் பல் வேறு துறைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முதலாமாண்டு மாணவ, மாணவிகள் அனைவரையும் கல்லூரியின் மூத்த மாணவர்கள் சாக்லேட், ரோஜா பூக்கள் ஆகியவற்றை வழங்கி வரவேற்றனர். இக்கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற 10 பேர், அகில இந்திய இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற 22 பேர் உட்பட மொத்தம் 150 பேர் முதலாமாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 10 பேர் உட்பட 150 மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. கல்லூரி முதல்வர் அசோகன் மாணவர்களை வரவேற்றுப் பேசினார். துணை முதல்வர் வெங்கடசுப்ரமணியன், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்