திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 13,53,159 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 6,62,326 ஆண்கள், 6,90,732 பெண்கள், 101 இதர வாக்காளர்கள் என, மொத்தம் 13,53,159 வாக்காளர்கள் உள்ளனர்.
திருநெல்வேலி தொகுதியில் ஆண்கள்- 1,42,272, பெண்கள்- 1,48,829, இதர வாக்காளர்கள்- 55, மொத்தம் 2,91,156 வாக்காளர்கள் உள்ளனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆண்கள்- 1,18,443, பெண்கள்- 1,25,601, இதரர்- 4, மொத்தம்- 2,44,048 வாக்காளர்கள் உள்ளனர். பாளையங் கோட்டை தொகுதியில் ஆண்கள்- 1,33,193, பெண்கள்- 1,38,511, இதரர்- 21, மொத்தம்- 2,71,725 வாக்காளர்கள் உள்ளனர். நாங்கு நேரி தொகுதியில் ஆண்கள்- 1,35,803, பெண்கள்- 1,40,544, இதரர்- 9, மொத்தம்- 2,76,356 வாக்காளர்கள் உள்ளனர்.
ராதாபுரம் தொகுதியில் ஆண்கள்- 1,32,615, பெண்கள்- 1,37,247, இதரர்- 12, மொத்தம்- 2,69,874 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர், உதவி ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் பார்வையிட்டு, பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 0462-1950, Voters Helpline APP மற்றும் www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 0462-1950 வாயிலாக வாக்காளர் விவரம் தெரிந்துகொள்ளலாம்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago