திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர்கள் குழு வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் வே.விஷ்ணு பேசிய தாவது: கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் மூலம் 20 சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் ஆர்வலர் குழுக்களாகவும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களாகவும், 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனமாகவும் உருவாக்கப் படுகிறது. இடுபொருள் செலவினத்தை குறைத்தல், கூட்டாக சாகுபடி, கூட்டாக சந்தைப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்கு விக்கப்படுகி ன்றனர். இதற்காக தமிழக அரசு ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வேளாண் துறையின் மூலம் 525 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 105 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தோட்டக்கலைத்துறை மூலம் 110 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 18 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
522 பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, 12,700 விவசாயிகளால் பயன் படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளால் பயன் படுத்தப்பட்டு வருகின்றன
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago