தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். அதன்படி, இம்மாவட்டத்தில் 6,53,540 ஆண் வாக்காளர்கள், 6,80,262 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 78 பேர் என, மொத்தம் 13,33,880 வாக்காளர்கள் உள்ளனர்.

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,22,739 ஆண் வாக்காளர்கள், 1,30,195 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,52,939 வாக்காளர்கள் உள்ளனர்.

வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,18,227 ஆண் வாக்காளர்கள், 1,22,101 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 49 பேர் என மொத்தம் 2,40,377 வாக்காளர்கள் உள்ளனர்.

கடையநல்லூர் தொகுதியில் 1,43,484 ஆண் வாக்காளர்கள், 1,45,416 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேர் என மொத்தம் 2,88,909 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி தொகுதியில் 1,42,974 ஆண் வாக்காளர்கள், 1,48,532 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2,91,524 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆலங்குளம் தொகுதியில் 1,26,116 ஆண் வாக்காளர்கள், 1,34,018 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 2,60,141 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 740 இடங்களில் மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்