திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான குளங்கள் உள்ளன. இவை லட்சக்கணக்கான பறவை களின் புகலிடமாக உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், விஜய நாராயணம், வடக்கு கழுவூர், நயினார்குளம், ராஜவல்லிபுரம், மானூர் போன்ற குளங்களும், தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், துப்பாக்குடி போன்ற குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், வெள்ளுர், கருங்குளம், ஆறுமுகமங்கலம், பெருங்குளம், மேல்புதுக்குடி சுனை போன்ற குளங்களும் பறவைகளின் முக்கிய வாழிடங்களாகும்.
இங்கு, 11-வது ஆண்டாக, வரும் 29 முதல் 31-ம் தேதிவரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் twbc2020@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 99947 66473 என்ற எண்ணில், வரும் 26-ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தகவலை, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago