திருவள்ளூர் நகராட்சியில் வரி விதிப்பில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரிந்து, தற்போது பூந்தமல்லி மற்றும் வாலாஜா நகராட்சிகளில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகளின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு பணியாற்றிய ஆணையர், நகரமைப்பு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 3 பேரும் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் வரி விதிப்பு செய்ததில் முறைகேடு செய்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, அப்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.
போலீஸாருக்கு அறிவுறுத்தல்
அந்த புகார்களின் அடிப்படையில், 2014-ம் ஆண்டு திருவள்ளூர் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராகவும், வருவாய் ஆய்வாளராகவும் பணிபுரிந்து, தற்போது பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு அலுவலராகவும், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகவும் பணிபுரிந்து வரும் லட்சுமிநாராயணன்(45), ஜானகி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.அதன்பேரில், திருநின்றவூர், பிரகாஷ் நகரில் உள்ள லட்சுமிநாராயணன் வீடு, திருவள்ளூர், இந்திரா நகரில் உள்ள ஜானகி வீடு ஆகியவற்றில், நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் தமிழரசி, கார்த்திக், சுமித்ரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட இரு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணி வரை
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நீடித்த அச்சோதனையில், 2 அதிகாரிகளின் வீடுகளில் உள்ள கணிப்பொறிகள் மற்றும் ஆவணங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago