தொண்டர்களின் கருத்தைக் கேட்டு பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என முடிவு செய்வோம், என தேமுதிக மாநில துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி தெரிவித்தார்.
நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் விஜய் சரவணன், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தேர்தல் பணிக்குழு நிர்வாகி சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கோவை மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கட்சியின் மாநில துணைச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைப் தேர்தலை சந்திப்பது குறித்து தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறோம். கூட்டணியிலும் போட்டியிடலாம். தனியாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது. தொண்டர்களின் கருத்தைக் கேட்டு பொதுக்குழுவை கூட்டித்தான் யாருடன் கூட்டணி என முடிவு செய்வோம். கழகத்தின் பொருளாளர் பிரேமலதா கூறியது போல் யார் அதிக இடங்கள் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி.
நாமக்கல்லைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொண்டர்களின் கருத்துகளை கேட்க உள்ளோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago