நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

By செய்திப்பிரிவு

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமையில், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியாவிடம் நேற்று அளித்த மனு:

நிவர், புரெவி புயல் மற்றும் அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட 90 சதவீத விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடு நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காப்பீட்டுத் தொகையாக மக்காச்சோளத்துக்கு ரூ.19 ஆயிரமும், பருத்திக்கு ரூ. 23,100 -ம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பியுள்ளனர். பல விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தவில்லை. எனவே, வெங்காயம், நெல்லுக்கு நிவாரண உதவி வழங்கியதை போல, பயிர்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தாத பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்