கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தற்காப்பு கருவிகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்திய இரைப்பை குடல் எண்டோ சர்ஜன்கள் சங்கம் மற்றும் புதுடெல்லி பிரீமியர் ரோட்டரி சங்கம் இணைந்து திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 1,000 தற்காப்புக் கருவிகளை நேற்று முன்தினம் வழங்கின.

இந்த நிகழ்ச்சியில் எண்டோ சர்ஜன்கள் சங்க தேசிய அறங்காவலரும், முன்னாள் ரோட்டரி ஆளுநருமான டாக்டர் சமீர் பாஷா, தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் மு.கோவிந்தராஜ் ஆகியோர் இந்தக் கருவிகளை மருத்துவக் கல்லூரி டீன் வனிதா, கண்காணிப்பாளர் எட்வினா, அறுவை சிகிச்சை நிபுணர் சாந்தினி, மருத்துவர்கள் ஜான்ஸ்டன், தர்மராஜன், கார்த்தீசன், ராஜவேல் உள்ளிட்டோரிடம் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்