அமைச்சர் காருக்கு பின்னால் சென்ற கார்கள் மோதல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகே அமைச்சர் ஜி.பாஸ்கரன் காரைத் தொடர்ந்து சென்ற கார் கள் விபத்துக்குள்ளானது. இதில் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை அருகே கண்டிப் பட்டியில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. அதைப் பார்த்துவிட்டு கதர் கிராமத் தொழில்கள் நலத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஊருக்குத் திரும்பிக் கொண் டிருந்தார்.

பாகனேரி அருகே வந்தபோது அமைச்சர் காரை தொடர்ந்து சென்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்ட அச்சகக் கூட்டுறவுச் சங் கத் தலைவர் சசிக்குமார்(43), ஓட்டுநர் சுரேஷ்(44) ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிவகங்கை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு அமைச்சர் ஆறு தல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்