‘புதிய வேளாண்மை சட்டங்களில் விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை’

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள அயன்சுத்தமல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய வேளாண்மை சட்டங்களில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகளிடமிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிச் செல்லும் நெல், கம்பு, சோளம், கரும்பு, பருத்தி உள்ளிட்ட தானியப் பொருட்களுக்கு கார்ப்பரேட் நிறுவனம் அளிக்கும் தொகையை தான் விவசாயிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தவறு செய்தால், நீதிமன்றத்தை விவசாயிகள் அணுக முடியாது. ஏற்கெனவே பல தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை ஏமாற்றி, பலகோடி ரூபாய்களை தராமல் ஏமாற்றி வருகின்றன. வேளாண் சட்டத்தை எதிர்த்தால், மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தும் என பயந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார் தமிழக முதல்வர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்