கரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி ஓரிரு நாட்களில் முழுமையாக முடிக்கப்படும் என ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள் ளது: கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 2,006 விவசாயிகளின் 1,536 ஹெக்டேர் நிலங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
இதில் நெல், உளுந்து, துவரை, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் கணக்கெடுப்பு செய்து முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago