மத்திய, மாநில அரசுகள் இணைந்து 2017-18-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் சாகு படிக்கு பயன்படாத மற்றும் தரிசு நிலங்களில் எண்ணெய்வித்து மரங்கள் சாகுபடியும் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு கடலூர் வட்டாரத்தில் தலா 1 ஹெக்டேரில் வேப்பமரம், புங்கம் நடவு செய்யும் திட்டத்தை விலங்கல்பட்டு கிராமத்தில் கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், "இத்திட்டத்தில் ஒரு ஹெக்டேரில் 400 வேம்பு கன்றுகள் நடவு செய்ய ரூ.17 ஆயிரம், 500 புங்கம் கன்றுகள் நடவு செய்ய ரூ.20 ஆயிரம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வேம்பு தோட்டம் பராமரிக்க ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இடையில் உளுந்து போன்ற ஊடுபயிர் சாகுபடி செய்து உபரி வருமானம் பெற ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago