பனைக்குளத்தில் கால்நடைகள் ஊர்வலம்

By செய்திப்பிரிவு

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பனைக்குளத்தில் மாடுகள், குதிரைகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே பனைக் குளத்தில் கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு மாட்டு பொங்கல் விழா, தலைவர் செய்குல் அக்பர் தலைமையில் நடைபெற்றது. சங்க அமைப் பாளர் அபு முகம்மது முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு கால்நடைகளின் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கறவை மாடுகள், குதிரைகள், குதிரை வண்டிகள் பங்கேற்றன. பனைக்குளம் தெற்கு தெரு நூர்முஹம்மது கம்பத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மேற்கு பேருந்து நிலையம், பாவோடி பஜார் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இறுதியில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர், பொங் கல், கரும்பு, பனங்கிழங்கு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்