நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

By செய்திப்பிரிவு

தை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி தை மாத முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு ஆஞ்ச நேயர் சுவாமிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்