விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட் டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வணிகர் சங்க பேரமைப்பு தலை வர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, "வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். தமிழகம் முழுவ தும் உள்ள 17 சதவீத வணிகர் களை ஒன்று திரட்டும் முயற்சி யில் வணிகர் சங்க பேரமைப்பு ஈடுபட்டு வருகிறது. வணிகர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றி தருவோர்களுக்கே வரும் சட்டப்பேரவை தேர்த லில் வணிகர்கள் ஆதரவு அளிப் பதாக முடிவு செய்துள்ளோம்.

புதுடெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு சந்திக்கும்போது, விவசாயிகளின் பிரச்சினை களை தீர்த்து வைக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் தர வேண்டும்.

கரோனா ஊரடங்கு காலத்தில் வணிகர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத் தொகையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்