கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
காணும் பொங்கலன்று பெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான விசுவக்குடி அணை, லாடபுரத்திலுள்ள மயிலூற்று அருவி, ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூரில் உள்ள தேசிய கல்மரப் பூங்கா ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். நிகழாண்டு கரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக காணும் பொங்கல் தினத்தன்று(நேற்று) சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டது. மேலும், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. விவரம் தெரியா மல் சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பொதுமக்களை போலீஸார் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பியனுப்பினர். இதனால் சுற்றுலாத் தலங்கள் வெறிச் சோடி காணப்பட்டன.
கரோனா பரவல் அச்சம் காரணமாக கிராமந்தோறும் நடைபெறும் பொங்கல் விளையாட்டுப் போட்டி களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் பெரும்பாலான கிராமங்களில் நடை பெறவில்லை. இதனால் வழக்கமான உற்சாகமின்றி பொங்கல் பண்டிகை விடைபெற்றது.
காணும் பொங்கலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள், சித்தன்னவாசல், திருமயம் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்தோடு கூடி மகிழ்வார்கள். ஆனால், மாவட்டம் முழுவதும் நேற்றும் காலையில் இருந்தே மழை பெய்ததால் மக்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தனர்.
இதனால், கோயில்கள், சுற்று லாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், விளையாட்டுப் போட்டிகளும் பெரும் பாலான இடங்களில் நடத்தப்பட வில்லை. இதனால் காணும் பொங் கலானது களையிழந்து காணப் பட்டது.
காணும் பொங்கலை முன் னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வழக்கத்தை விட குறைவான பொதுமக்களே வந்திருந்தனர். கோயில் வளாகத் தில் அமர அவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago